உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துணை மேயர் வசிக்கும் தெருவில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

துணை மேயர் வசிக்கும் தெருவில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் குமரகுருநாதன் வசிக்கும் ஆடிசன்பேட்டை தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையில் கழிவுநீர் வழிந்தோடி, சுகாதார சீர்கேடுஏற்பட்டுள் ளது. காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவில் பின்புறம் ஆடிசன்பேட்டை தெரு உள்ளது. இந்த தெருவில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மாநகராட்சி 34வது வார்டுக்கு உட்பட்ட இந்த தெருவில், 22வது வார்டில் வெற்றி பெற்று, மாநகராட்சி துணை மேயராக பதவி வகிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுருநாதனின் வீடும் உள்ளது. இந்நிலையில், துணை மேயர் வசிக்கும் இத்தெரு நுழைவாயில் பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, இரண்டு நாட்களாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால், காந்தி சாலையில் செல்வோரும், வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி ஆடிசன்பேட்டை தெரு மக்களும் கழிவுநீரில் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, காஞ்சிபுரம் ஆடிசன்பேட்டை தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ