சாலையில் ஓடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு மற்றும் ராஜகோபுரம் அருகில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கு மேலாக, ‛மேன்ஹோல்' வழியாக கழிவுநீர், சாலையில் வழிந்தோடுகிறது.அதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளித்தபடியே செல்கின்றனர்.எனவே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெரு மற்றும் ராஜகோபுரம் அருகில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.