உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாதனம் பாளையம் தெருவில், பாதாள சாக்கடை அடைப்பால் வழிந்தோடும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி, 12வது வார்டு, பிள்ளையார்பாளையம் மாதனம்பாளையம் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மஹா அபிராமி அம்மன் கோவில் அருகில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 10 நாட்களாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தால், பாதாள சாக்கடை அடைப்பை முழுதும் நீக்காமல், பெயரளவுக்கு கழிவுநீரை மட்டும் லாரி மூலம் அகற்றுகின்றனர். இதனால், ஓரிரு நாட்களில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவது வாடிக்கையாக உள்ளது என, இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி