உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வட்டு எறிதல் போட்டி சங்கரா மாணவருக்கு பதக்கம்

வட்டு எறிதல் போட்டி சங்கரா மாணவருக்கு பதக்கம்

காஞ்சிபுரம்:மதுரையில் நடந்த முதல்வர் கோப்பை, மாநில அளவில், கல்லுாரி மாணவர்களுக்கான, வட்டு எறிதல் போட்டியில், காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை மாணவர் இளையபெருமாள் வெள்ளிப்பதக்கம் வென்றார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பை, மாநில அளவில் கல்லுாரி மாணவர்களுக்கான வட்டு எறிதல் போட்டி மதுரையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 38 மாவட்டங்களைச் சேர்ந்த கல்லுாரி மற்றும் பல்கலையைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில், காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையைச் சேர்ந்த மாணவர் இளையபெருமாள் இரண்டாம் பரிசு பெற்று, வெள்ளிப்பதக்கம் வென்றார். காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, பயிற்சியாளர் தாஸ் ஆகியோர் இளையபெருமாளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ