மேலும் செய்திகள்
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை லட்ச தீப விழா
08-Dec-2024
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, அறங்காவலர் குழு தலைவர், இரு உறுப்பினர்கள் என மூன்று நபர்களை, ஹிந்து அறநிலைய துறை நியமித்துஇருந்தது. இவர்களில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இருவர், ஆக.,மாதம் ராஜினாமாசெய்தனர். கடந்த செப்டம்பர் மாதம் அறங்காவலர் குழு கலைக்கப்பட்டு, உலகளந்த பெருமாள் கோவில் செயல் அலுவலரை, தக்காராக ஹிந்து அறநிலையதுறை இணை ஆணையர் நியமித்தார்.மூன்று மாதங்களாகியும், தற்போது வரை அவர் பொறுப்பு ஏற்கவில்லை. இதனால், விழாக்கள் நடத் துவதில் பல்வேறு சிரமங் களை சந்திக்க வேண்டியுள்ளது என, கிராமவாசிகள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
08-Dec-2024