மேலும் செய்திகள்
'நான் முதல்வன்' திட்டம் படுதோல்வி: பா.ம.க.,
13-Jul-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரியில், 'நான் முதல்வன்' திட்டத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில், திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் பேராசிரியர்களுக்கு நடந்தது. காஞ்சிபுரம் பொன்னேரிகரையில் அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரி உள்ளது. இங்கு, 'நான் முதல்வன்' திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் ஆக., 4ம் தேதி முதல் ஆறு நாட்கள், பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் கோதண்டபாணி, கல்லுாரியின், 'நான் முதல்வன்' திட்ட ஒருங்கிணைப்பாளர் மல்லேசுவரன் ஆகியோர் பயிற்சி முகாமை துவக்கி வைத்தனர். இதில், 110 பேராசிரியர்கள் பங்கேற்றனர். பயிற்சி பெற்ற பேராசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பர். பேராசிரியர் கவிதா, முனைவர் சந்திரசேகர் ஆகியோர் பயிற்சி முகாமை ஒருங்கிணைத்தனர்.
13-Jul-2025