உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மண் திருட்டு லாரி பறிமுதல்

மண் திருட்டு லாரி பறிமுதல்

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே வடமங்கலத்தில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை துறை அதிகாரிகள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, உரிய ரசிது இல்லாமல் கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை பிடித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் லாரியை பறிமுதல் செய்து, லாரியின் உரிமையாளர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிக்கனி, 45, என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை