உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குரு கோவிலில் சோலார் அமைப்பு 

குரு கோவிலில் சோலார் அமைப்பு 

கோவிந்தவாடி:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், குரு கோவில் என, அழைக்கப்படும் கைலாசநாதர் சமேத தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் வருகை தருகின்றனர்.கோவில் வளாகத்தில் அடிக்கடி மின் சப்ளை துண்டிப்பு ஏற்படும். இதுபோன்ற நேரங்களில் பக்தர்கள் இருளில் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, கோவிலுக்கு தனி நபர் ஒருவர் நன்கொடை உதவியுடன், சோலார் பேனல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்த சோலார் பேனல் வாயிலாக, உற்பத்தியாகும் மின்சாரம் கோவில் வளாக தேவைக்கு பயன்படுத்தப்பட உள்ளன.கோவில் வளாகத்தில், மின் சப்ளையும் இருக்கும். சோலார் பேனலில் மின் உற்பத்தியாகாத நேரங்களில், மின் சப்ளை வாயிலாக மின் விளக்கு மற்றும் மின் விசிறிகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !