274 ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராம சபை
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், காந்திஜெயந்தி தினத்தையொட்டி நாளை, சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சிகளில் நடக்க உள்ளன.இதில், செலவின பட்டியல் தயாரித்து பொது மக்கள் பார்வைக்கு வைத்தல், துாய்மையான குடிநீர் வினியோகம் செய்வது, ஊராட்சி தணிக்கை அறிக்கை சமர்ப்பித்தல், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளன.இதை, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.