உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 17ல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்

17ல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, கலெக்டர் தலைமையில், சிறப்பு குறைதீர்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.மாற்றுத்திறனாளிகள் நல கமிஷனர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏப்ரல் மாதத்திற்கான சிறப்பு குறைதீர்கும் நாள் கூட்டம், இம்மாதம் 17ம் தேதி, மாலை 4:00 மணிக்கு, கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடத்தப்பட உள்ளது.இம்முகாமில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம்.இம்முகாம் தொடர்பான மேலும் விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 044- 29998040 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ