மேலும் செய்திகள்
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
13-Mar-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பாலேஸ்வரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில், நாளை, 64வது ஆண்டு விழா நடக்க உள்ளது.இதை முன்னிட்டு. பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன. பாலேஸ்வரம் ஊராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி பங்கேற்று, விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார்.அதில், ஓட்டப்பந்தயம், கோ -கோ, சதுரங்கம், கேரம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில், பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி, மாணவர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
13-Mar-2025