உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வி.ஏ.ஓ., அலுவலக சுவரில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் உறுதித்தன்மை பாதிப்பு

வி.ஏ.ஓ., அலுவலக சுவரில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் உறுதித்தன்மை பாதிப்பு

காஞ்சிபுரம், சின்ன காஞ்சிபுரத்தில், சிதிலமடைந்த நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக சுவரில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால், உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. சின்ன காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில், பழமையான கட்டடத்தில், காஞ்சிபுரம் - -2 பகுதிக்கான கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. நுாற்றாண்டை கடந்த இக்கட்டடத்தை முறையாக பராமரிக்காததால், அலுவலக கூரை மற்றும் சுவர்களில் அரசமர செடிகள் வளர்ந்து கட்டடம் சிதிலமடைந்து, மழைக்காலத்தில் ஒழுகுவதால் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் நனைந்து வீணாகும் நிலை உள்ளது. கட்டடத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இச்செடியின் வேர்கள் சுவரில் வேரூன்றி வளர்வதால் நாளடைவில் கட்டடம் முழுதும் வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு பணிபுரிவோர் மட்டுமின்றி இந்த அலுவலகத்திற்கு பல்வேறு ஆவணங்கள் பெற வரும் பொதுமக்களும் அச்சத்துடன் வருகின்றனர். எனவே, பழமையான கட்டடத்தில் இயங்கும் காஞ்சிபுரம் - 2 பகுதிக்கான கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ