| ADDED : ஜன 11, 2024 12:35 AM
கீழம்பி:தமிழ் வளர்ச்சித் துறை செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் மற்றும் காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், 'சொற்குவை' மாணவ துாதுவர் பயிற்சி திட்டம், செயல்முறை விளக்க நிகழ்ச்சி கல்லுாரியில் நடந்தது.கல்லுாரி தமிழ்த் துறை தலைவர் முனைவர் வீரராகவன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். கல்லுாரி நிர்வாக இயக்குனர் வீரராகவன் மற்றும் சென்னை கிறிஸ்துவ கல்லுாரி பேராசிரியர் முனைவர் சதாசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.செந்தமிழ்ச் சொற்பிறப்பியல், அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குனர் முனைவர் கோ.விசயராகவன், திட்ட செயலாக்கஉரையாற்றினார்.மாணவர்களுக்கு சொற்குவை துாதுவர் எனும் சான்றிதழும், பரிசும் வழங்கி, செந்தமிழ் தமிழ் காப்போம், செந்தமிழில் பேசுவோம் எனும் கருத்தினை வலியுறுத்தி எங்கும் தமிழ், எதிலும் தமிழ், நம்மொழி தாய்மொழி தமிழ்மொழி காப்போம் என, எடுத்துரைத்தார்.