உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தார்ப்பாய் மூடாமல் செல்லும் கனரக வாகனங்களால் அவதி

தார்ப்பாய் மூடாமல் செல்லும் கனரக வாகனங்களால் அவதி

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், மாகரல் மற்றும் ஆர்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தனியார் கல் அரவை தொழிற்சாலை இயங்குகின்றன. இதேபோன்று, உத்திரமேரூர் ஒன்றியத்தின் பல கிராமங்களில் தனியார் கல் குவாரி மற்றும் கிரஷர்கள் செயல்படுகின்றன.இப்பகுதிகளில் இருந்து, வாலாஜாபாத் வழியாக தினமும் ஏராளமான லோடு வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், ஒரு சில வாகனங்கள் தவிர்த்து பெரும்பாலான கனரக வாகனங்கள் தார்ப்பாய் மூடாமல் சொல்கின்றன.இதனால், லாரிகளில் ஏற்றி செல்லும் ஜல்லி கற்கள் சாலையில் சிதறுவதோடு, மண் துகள்கள் காற்றில் பறந்து பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கண்களை பதம் பார்க்கின்றன.மேலும், கனரக வாகனங்களில் இருந்து பறக்கின்ற மண், எம்.சாண்ட் போன்றவை சாலைகளில் படிந்து புழுதி பறக்கின்றன. இதனால், வாகன ஒட்டிகள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.எனவே, தார்ப்பாய் மூடாத லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ