உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் துவக்கம்

காஞ்சி கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் துவக்கம்

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் வரசக்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் துவங்கியது.காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரை. வரதராஜபுரம் தெருவில் உள்ள வரசித்தி விநாயகர் மற்றும் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் கோடை உத்சவம் நான்கு நாட்கள் நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான உத்சவம் நேற்று இரவு 7:00 மணிக்கு துவங்கியது.இன்று இரவு 9:00 மணிக்கு ஜலம் திரட்டும் நிகழ்வு, நாளை அதிகாலை 4:00 மணிக்கு அம்மன் வீதியுலா, மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தல், இரவு 8:00 மணிக்கு கும்பம் படையலிட்டு அம்மன் வர்ணிப்பு நிகழ்வு நடக்கிறது. நிறைவு நாளான நாளை மதியம் 12:00 மணிக்கு சீர்கஞ்சி வார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி