உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / Tag Line -- பரந்துார் ஏர்போர்ட் நாகப்பட்டு கிராமத்தில் கருப்பு கொடி போராட்டம்

Tag Line -- பரந்துார் ஏர்போர்ட் நாகப்பட்டு கிராமத்தில் கருப்பு கொடி போராட்டம்

காஞ்சிபுரம்:சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு, பரந்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 5,400 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில், தனியார் வசமிருக்கும், 3,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. மீதியுள்ளவை அரசு நிலங்கள்.தனியாரிடம் உள்ள நிலம் எடுக்கும் பணிக்கு, அரசு ஒவ்வொரு கிராமமாக அறிவிப்பை வெளியிட்டு, நிலம் கையகப்படுத்தி வருகிறது.கடந்த அக்.,7ம் தேதி, நாகப்பட்டு கிராம மக்களின் நிலங்களை, பரந்துார் விமான நிலைய நில எடுப்பு அலுவலர்கள் அளக்க சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர், வருவாய் துறையினரை முற்றுகையிட்டு, எதிர்ப்பு தெரிவித்தனர்.அதை தொடர்ந்து, விவசாயிகளின் அனுமதி இல்லாமல் நிலம், வீடு கையகப்படுத்தும் நடவடிக்கை நிறுத்த வேண்டும். விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், இன்று காலை, அனைவரின் வீடுகளின் முன் கருப்பு கொடி ஏற்ற உள்ளதாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ