உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேசிய கூடைப்பந்து போட்டிகோப்பையை வென்ற தமிழகம்

தேசிய கூடைப்பந்து போட்டிகோப்பையை வென்ற தமிழகம்

சென்னை, தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில், தமிழக அணி, மஹாராஷ்டிராவை தோற்கடித்து, சாம்பியன் கோப்பையை வென்றது.எஸ்.ஜி.எப்.ஐ., எனும் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை இணைந்து, 68வது தேசிய கூடைப்பந்து போட்டி, செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரியில், நான்கு நாட்கள் நடந்தன.மாணவியருக்கான இப்போட்டியில், தமிழகம், பீஹார், டில்லி, புதுச்சேரி உட்பட நாடு முழுதும் இருந்து, 33 மாநில அணிகள் பங்கேற்று, 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் மோதின.மழையால், இறுதிப் போட்டிகள் மட்டும், நேரு விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் நடந்தது. இறுதிப் போட்டியில், தமிழகம் மற்றும் மஹாராஷ்டிரா அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில், 53 - 47 என்ற கணக்கில், தமிழக அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது.மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், சி.பி.எஸ்.இ., அணி, 52 - 50 என்ற கணக்கில், சி.ஐ.எஸ்.சி.இ., அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது. போட்டியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறையின் செயலர் மதுமதி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி நிறுவனர் பாபு மனோகரன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை