டேங்கர் லாரி வயலில் கவிழ்ந்து விபத்து
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, தனியார் தொழிற்சாலைக்கு தண்ணீர் எடுத்து சென்ற டேங்கர் லாரி, கட்டுபாட்டை இழந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.ஒரகடம் அருகே, காஞ்சிவாக்கம் கிராமத்தில் இருந்து, தனியாருக்கு செந்தமான டேங்கர் லாரி ஒன்று, ஒரகடத்தில் உள்ள தொழிற்சாலைக்கு தண்ணீர் ஏற்றி கொண்டு, நாவலுார் வழியாக செரப்பனஞ்சேரி வந்தது.காஞ்சிவாக்கம் -- செரப்பனஞ்சேரி சாலையில், நாவலுார் அருகே டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் வந்த ‛பொலிரோ' காருக்கு வழிவிட வயல்வெளியோரம் லாரியை டிரைவர் ஒதுங்கினார்..அப்போது, மழையினால் சாலையோரம் இருந்த சேற்றில் சிக்கி, டேங்கர் லாரி வயலில் கவிழ்ந்தது. இதில், டேங்கர் லாரியை ஒட்டிவந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இதையடுத்து, கிரேன் இயந்திரம் வாயிலாக, வயலில் கவிழ்ந்த டேங்கர் லாரியை மீட்டனர்.