மேலும் செய்திகள்
செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம்
01-Oct-2025
கீழம்பி: கீழம்பியில் உள்ள எஸ்.எஸ்.கே.வி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிக துறை சார்பில், 'வணிகம் 2.0வை இயக்குதல் - வெற்றியை நோக்கி தொழில்நுட்பத்தை வலிமையாக கையாளுதல்' என்ற தலைப்பில், தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பியில் உள்ள எஸ்.எஸ்.கே.வி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிக துறை சார்பில், 'வணிகம் 2.0வை இயக்குதல் - வெற்றியை நோக்கி தொழில்நுட்பத்தை வலிமையாக கையாளுதல்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடந்தது. கல்லுாரி செயலர் சி.கே.ராமன் தலைமை வகித்தார். கேரள மாநில என்.எஸ்.எஸ்., கல்லுாரியின் ஓய்வு பெற்ற முதல்வர் இணை பேராசிரியர் சுரேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பேராசிரியர்களின் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டன. கல்லுாரி முதல்வர் திருமாமகள் துவக்க உரையாற்றினார். இதில், வணிகவியல் துறை தலைவர், கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் மாணவியர் பங்கேற்றனர்.
01-Oct-2025