மேலும் செய்திகள்
ஆனைமலையில் கொப்பரை ஏலம்
30-Oct-2025
உத்திரமேரூர்: உத்திரமேரூரில், மூன்று கோவில்களின் 21.95 ஏக்கர் நிலம், சாகுபடி குத்தகை ஏலம் 1.48 லட்சம் ரூபாய்க்கு நேற்று விடப்பட்டது. உத்திரமேரூர் தாலுக்கா, சித்தனக்காவூர் கிராமத்தில், முத்தீஸ்வரர் மற்றும் வெங்கடேச பெருமாள் கோவில்கள் உள்ளன. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலான இக்கோவில்களுக்கு, சொந்தமாக 11.95 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் ஆண்டுதோறும் சாகுபடி குத்தகை ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான சாகுபடி குத்தகை ஏலம், உத்திரமேரூர் சரக ஹிந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளர் பிரித்திகா முன்னிலையில் நேற்று விடப்பட்டது. அதில் 11.95 ஏக்கர் நிலம் ஓராண்டிற்கான குத்தகை தொகை 86,300 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. அதேபோல, கீழ்தண்டரை கைலாசநாதர் கோவிலிலும் செயல் அலுவலர் ஈகுல்ராஜ் முன்னிலையில் நேற்று நடந்த, சாகுபடி குத்தகை ஏலத்தில், 10 ஏக்கர் நிலம் 62,000 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இறுதியாக மூன்று கோவில்களிலும் சேர்த்து, 21.95 ஏக்கர் நிலம், 1.48 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
30-Oct-2025