உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பராமரிப்பின்றி கோவில் குளம்

பராமரிப்பின்றி கோவில் குளம்

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வளையக்கரணை ஊராட்சி, உமையாள்பரனஞ்சேரி கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் குளம் உள்ளது. இக்குளம் அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக விளங்குவதுடன், அப்பகுதியினரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இருந்தது.இந்த நிலையில், குளம் தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், குளம் பாசி படிந்து, குளத்தை சுற்றி குப்பையாக நிறைந்து காணப்படுகிறது. மேலும், குளத்தின் நீரும் மாசடைந்து வருகிறது.எனவே, கோவில் குளத்தை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை