கோவிலில் திருடியவர் சிக்கினார்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட, திருக்காலிமேடு பகுதியில் உள்ளது கமலா விநாயகர் கோவில். இக்கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக, இளையராஜா என்பவர், நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரியான நடராஜன் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.கோவிலுக்கு நேரில் சென்று பூசாரி பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதையடுத்து, காஞ்சி தாலுகா போலீசில் நடராஜன் அளித்த புகாரையடுத்து, வழக்குப்பதிந்த போலீசார், காஞ்சிபுரம் பாக்ராபேட்டையைச் சேர்ந்த வேலு,48, என்பவரை, நேற்று கைது செய்தனர்.