மேலும் செய்திகள்
பழநியில் காத்திருந்த பக்தர்கள்
27-Jan-2025
குன்றத்துார்:குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தை பூசம் தினமான நேற்று காலை 4:00 மணிக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.அதிகாலை முதலே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் ஏந்தியும், நடைபயணமாக வந்தும், பக்தர்கள் வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும், குடிநீர், சிறப்பு பேருந்து வசதி, அன்னதானம் வழங்கப்பட்டது.கடந்த ஆண்டை விட, இந்தாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால், கோவில் மலை குன்றில் இருந்து அடிவாரம் வரை, 2 கி.மீ., துாரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
27-Jan-2025