உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலை, முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் ரயில்வே சாலை, அம்பேத்கர் நகரில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து, 12 ஆண்டுகள் நிறைவு பெற்றன. இதனால், இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி, கோவிலில் பல்வேறு திருப்பணி சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது. நேற்று, காலை 9:00 மணிக்கு, முத்துமாரியம்மன், விநாயகர், முருகப்பெருமான், நவக்கிரஹங்களுக்கு வேதவிற்பன்னர் மூலம் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. இக்கோவிலில் நாளை மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 7:00 மணிக்கு புஷ்ப அலங்காரத்தில் முத்து மாரியம்மன் வீதியுலா வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை