உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புகார் பெட்டி சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும்

புகார் பெட்டி சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும்

உத்திரமேரூர் ஒன்றியம், தண்டரை செல்லும் சாலையில் சேர்ப்பாக்கம் பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை, 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.தற்போது, பயணியர் நிழற்குடை பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. பயணியர் நிழற்குடையின் கூரையில் கான்கிரீட் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது.சேதமடைந்த நிழற்குடை இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பயணியர் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்த பயணியர் நிழற்குடையை அகற்றி, புதிதாக அமைக்க வேண்டும்.-- ஆர்.எஸ். அறிவழகன்,திருப்புலிவனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ