| ADDED : ஜன 30, 2024 06:04 AM
சென்னை : தி.நகர், தணிகாசலம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரேயன்க். இவரது வீட்டில், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், 24, என்பவர் கார் ஓட்டுனராக பணிபுரிகிறார்.கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், நேற்று முன்தினம் நடந்த ஸ்ரேயன்க் குடும்ப நிகழ்ச்சிக்கு அனைவரும் காரில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்து, தேனாம்பேட்டை, சேமியர்ஸ் சாலை பகுதியில் வசிக்கும் உறவினரின் மகளை இறக்கி விட்டனர். பின் அங்கிருந்து வீட்டிற்கு செல்ல பிரகாஷ் காரை எடுத்தார்.அப்போது, சாலையின் நடுவில் அமர்ந்து, ஏழு பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். ஓட்டுனர் பிரகாஷ் 'ஹாரன்' அடித்து வழிவிடும்படி கேட்டுள்ளார்.அதீத மதுபோதையில் இருந்த கும்பல், திடீரென தகராறில் ஈடுபட்டனர். பின், பிரகாஷ் காரை இயக்கியபோது, கார் கண்ணாடியை உடைத்து பிரகாஷை தாக்கினர்.இதில், அவர் காயமடைந்தார். தேனாம்பேட்டை போலீசார் விரைந்து வந்தபோது, ஐந்து பேர் தப்பினர்; இருவர் சிக்கினர். அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில், தேனாம்பேட்டை, ஆஸ்டின் நகரை சேர்ந்த ராஜேஷ், 22, பைகிராப்ட்ஸ் நகரை சேர்ந்த துணிக்கடை ஊழியர் சந்திரன், 24, என தெரிந்தது. மற்ற ஐந்து பேரையும் தேடி வருகின்றனர்.