உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாட்டு தொழுவமாக மாறிய கருப்படிதட்டடை நுாலக வளாகம்

மாட்டு தொழுவமாக மாறிய கருப்படிதட்டடை நுாலக வளாகம்

கருப்படிதட்டடை: கருப்படிதட்டடை ஊராட்சியில் உள்ள நுாலக வளாகம், மாடுகள் கட்டப்பட்டு தொழுவமாக மாறி உள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சியில், 2011ம் ஆண்டு முதல், நுாலகம் செயல்பட்டு வருகிறது. ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் தினசரி நாளிதழை வாசிக்கவும், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், அரசு போட்டி தேர்வு எழுதுவோர் முக்கிய குறிப்பு எடுக்கவும் நுாலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் கால்நடை வளர்ப்போர், தங்கள் மாடுகளை வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல், நுாலக வளாகத்தில் கட்டி வைக்கின்றனர். நுாலக நுழைவாயில் முன் மாட்டுத் தொழுவம் செயல்படுவதால், நுாலகத்திற்கு வரும் வாசகர்கள், மாடுகள் முட்டி விடுமோ என, அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, கருப்படிதட்டடை ஊராட்சி நுாலகம் முன், மாடுகள் கட்ட தடை விதிக்கவும், தடையை மீறி கட்டப்படும் மாடுகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ