உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாயமான மழைநீர் கால்வாய்; நகராட்சி நிர்வாகம் மெத்தனம்

மாயமான மழைநீர் கால்வாய்; நகராட்சி நிர்வாகம் மெத்தனம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு உடையார் தெருவில், அப்பகுதியில் பெய்யும் மழைநீர், சின்ன வேப்பங்குளத்திற்குசெல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய் மண் கால்வாயாக இருப்பதாலும், முறையான பராமரிப்பு இல்லாததாலும், கால்வாயில் செடி, கொடிகள் நிறைந்து, கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.இதனால், பலத்த மழை பெய்தால், இக்கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் அபாயம் உள்ளது.எனவே, மழைநீர் வடிகால்வாயில் நிறைந்துள்ள செடி, கொடிகளை முழுமையாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை