உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ‛லிப்ட் கேட்டு சென்ற முதியவர் உயிரிழப்பு

‛லிப்ட் கேட்டு சென்ற முதியவர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அருகே சுங்குவார்சத்திரத்தை அடுத்த பாப்பாங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன், 72. நேற்று காலை அதே கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி, 45, என்பவரின், 'ஆக்டிவா' ஸ்கூட்டரில் லிப்ட் கேட்டு சென்றார்.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சந்தவேலுார் அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில், சந்திரன் உயிரிழந்தார். மாசிலாமணி படுகாயமடைந்தார்.அக்கம்பக்கத்தினர் மாசிலாமணியை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ