உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விளையாட்டு மைதானம் படுமோசம் சிங்காடிவாக்கம் இளைஞர்கள் கவலை

விளையாட்டு மைதானம் படுமோசம் சிங்காடிவாக்கம் இளைஞர்கள் கவலை

சிங்காடிவாக்கம்,:வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் ஊராட்சியில், கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2019 - -20ம் ஆண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது.இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், இந்த விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது, முறையான பராமரிப்பு இல்லாததால், ஆடுகளத்தை சுற்றிலும் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வலைகள் அறுந்து விட்டது.மேலும், செடிகள் வளர்ந்துள்ளதால், விளையாட்டு மைதானத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் புதிதாக வலை அமைக்கவும், செடிகளை அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை