உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இறைச்சி கழிவால் துர்நாற்றம்

இறைச்சி கழிவால் துர்நாற்றம்

படப்பை:குன்றத்துார் ஒன்றியம், நடுவீரப்பட்டு ஊராட்சியில் இருந்து, மணிமங்கலம் செல்லும் சாலை உள்ளது. இந்த வழியே குன்றத்துார், நடுவீரப்பட்டு, மணிமங்கலம், படப்பை மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்கு ஏராளமான வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.இந்த சாலையோரம், நடுவீரப்பட்டு ஊராட்சி எல்லையில் கோழி இறைச்சி கழிவு அதிகம் கொட்டப்படுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.இறைச்சி கழிவை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி