மேலும் செய்திகள்
திருவண்ணாமலை கிரிவலக்குழு ஆண்டு விழா
06-Jan-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், திருவண்ணாமலை கிரிவலக்குழு சிவத்தொண்டு நற்பணி மன்றம் சார்பில், காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள சித்தீஸ்வரர் கோவிலில், திருவாசகம் முற்றோதல் செய்யும் நிகழ்வு நடந்தது.இதில், கிரிவலக்குழு நிறுவன செயலர் கங்காதரன் தலைமையில், சிவ பக்தர்கள் திருவாசகம் எட்டாம் திருமுறையில், 51 பதிகங்களில் உள்ள, 658 பாடல்களையும் முற்றோதல் செய்தனர். முன்னதாக, கோவிலில் மாகேஸ்வர பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
06-Jan-2025