உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முசரவாக்கம் ஏரியை வளைத்து 100 ஏக்கரில் விவசாயம் ஆக்கிரமிப்புகளை அகற்றிய நீர்வளத்துறை

முசரவாக்கம் ஏரியை வளைத்து 100 ஏக்கரில் விவசாயம் ஆக்கிரமிப்புகளை அகற்றிய நீர்வளத்துறை

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ஒன்றியம், முசரவாக்கம் ஏரியில், 100 ஏக்கரை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததை, நீர்வளம், வருவாய் துறை மற்றும் போலீசாரின் உதவியோடு மீட்டனர்.காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்டது முசரவாக்கம் கிராமம். இக்கிராமத்தில், 150 ஏக்கர் பரப்பளவில், நீர்ளவத்துறை கட்டுப்பாட்டில் முசரவாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி, சுற்றியுள்ள 500க்கும் அதிகமான ஏக்கர் விளைநிலங்கள் நம்பி உள்ளன. ஆனால், முசரவாக்கம் மற்றும் சுற்றியுள்ள சில கிராமங்களை சேர்ந்தவர்கள், முசரவாக்கம் ஏரியை முழுமையாக ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாகவே நெல் பயிரிட்டு வந்துள்ளனர்.இதுதொடர்பாக, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கும், நீர்வளத் துறையினருக்கும் புகார்கள் வந்தபடி இருந்தன.ஆக்கிரமிப்பாளர்களிடம் அதிகாரிகள் எச்சரித்து வந்தபோதும், ஏரியை ஆக்கிரமிப்பது தொடர்ந்தது. இந்நிலையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட பின், நீர்வளத் துறை அதிகாரிகள், வருவாய் துறை மற்றும் போலீசாரின் உதவியோடு, நேற்று முன்தினம் முதல், முசரவாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற துவங்கியுள்ளனர்.டிராக்டர், கனரக வாகனங்கள் போன்றவை பயன்படுத்திய அதிகாரிகள், நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.மொத்தமுள்ள 150 ஏக்கர் ஏரியில், 100 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்து, பயிரிட்டுள்ளனர். இதில், 25 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் நேற்று முன்தினம் அகற்றப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று 25 ஏக்கர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மீதமுள்ள 50 ஏக்கர் பயிரிடப்பட்டு, நெற்பயிர்கள் விளைந்துள்ளதால், அறுவடை முடிந்த உடன் அவை அகற்றப்படும் என, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.முசரவாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றிய பின், வேகவதி ஆற்றில் உள்ள செங்கல் சூளைகள் அகற்றப்படும் என, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி