உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருபுட்குழி கோவில் காலையில் திறக்காததால் பக்தர்கள் அவதி

திருபுட்குழி கோவில் காலையில் திறக்காததால் பக்தர்கள் அவதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி கிராமத்தில், மரகதவல்லி சமேத விஜயராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, மாதந்தோறும் அமாவாசை மற்றும் குழந்தை பேறு வேண்டி தினசரி நேர்த்திக்கடன் செய்ய பக்தர்கள், கோவிலுக்கு வருகை தருகின்றனர்.அவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்கு சவுகரியமாக, காலை 6:00 மணி அளவில் கோவில் திறப்பதில்லை. மாறாக, 7:00 மணிக்கு மேல் திறக்கின்றனர்.இதனால், மாத அமாவாசை மற்றும் குழந்தை பேறு வேண்டி வரும் பக்தர்கள், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே, தினசரி, காலை 7:00 மணிக்கு முன்னதாக கோவில் திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, திருட்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில் செயல் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‛ஆகம விதிகளின்படி, காலை 7:00 மணிக்கு தான் கோவில் திறக்க வேண்டும் என கூறுகின்றனர். அமாவாசை காலங்களில், முன் கூட்டியே கோவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ