உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருத்தணிக்கு நேரடி பஸ் வசதி தேவை

திருத்தணிக்கு நேரடி பஸ் வசதி தேவை

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் இருந்து, திருத்தணிக்கு செல்ல நேரடி பேருந்து வசதிகள் இல்லை. இதனால், உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றி வட்டார பகுதியினர் , திருத்தணிக்கு செல்ல வேண்டும் எனில், காஞ்சிபுரம் சென்று, அங்கிருந்து, பேருந்து பிடித்து திருத்தணி செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதனால், நேர விரயம் மற்றும் கூடுதல் போக்குவரத்து செலவு உள்ளிட்ட பிரச்னைகளால் பயணியர் அவதிப்படுவகின்றனர்.இதுகுறித்து, உத்திரமேரூர் பகுதியினர் கூறியதாவது:அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிக்கு, முருகபெருமானை வழிபட உத்திரமேரூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். மேலும், சஷ்டி, கிருத்திகை செவ்வாய்க்கிழமை போன்ற விசேஷ நாட்களிலும் அதிக அளவில் மக்கள் திருத்தணி செல்கின்றனர்.எனவே, உத்திரமேரூரில் இருந்து, திருத்தணிக்கு, நேரடி அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை