மேலும் செய்திகள்
படப்பை காவல் நிலையம் தயார்
18-Mar-2025
படப்பை,:படப்பை, பெரியார் நகரைச் சேர்ந்தவர் பாரதிராஜா, 42. இவர், படப்பை பஜார் பகுதியில் சாலையோரம் பழக்கடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு படப்பையைச் சேர்ந்த சுகன், 28, என்பவருடன், படப்பை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள அரசு 'டாஸ்மாக்' கடையில் மது அருந்தியுள்ளார்.அப்போது, பாரதிராஜாவின் மனைவியை பற்றி சுகன் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், பாரதிராஜா சுகனை தாக்கியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து சென்ற சுகன், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி, 24, ராம்குமார், 31, லட்சுமணன், 38, ஆகியோருடன் சேர்ந்து, பாரதிராஜாவை ஆட்டோவில் கடத்தி சென்று, சரமாரியாக தாக்கி கத்தியால் கழுத்தில் வெட்டி தப்பினர்.படுகாயம் அடைந்த பாரதிராஜாவை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக ராஜிவ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சுகன், ராம்குமார், கிருஷ்ணமூர்த்தி, லட்சுமணன் ஆகிய நான்கு பேரையும், மணிமங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
18-Mar-2025