உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  தார்ப்பாய் மூடாமல் செல்லும் டிப்பர் லாரியால் விபத்து அபாயம்

 தார்ப்பாய் மூடாமல் செல்லும் டிப்பர் லாரியால் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்: டிப்பர் லாரியில் அதிகபாரம் ஏற்றி செல்லும்போது, தார்ப்பாய் மூடாமல் செல்வதால், பிற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பள்ளூர் - சோகண்டி வரையில், மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., துாரம் ஒரு வழி சாலை இருந்தது. இச்சாலையில், வாகனப்போக்குவரத்து அதிகரித்து இருப்பதால், இரு வழி சாலையாக, விரிவுப்படுத்தும் பணி, 2021ம் ஆண்டு ஏப்ரலில் துவங்கியது. இந்த சாலை, கிராமப்புற சாலையாக இருப்பதால், கனரக வாகனங்கள் மற்றும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. இது தவிர, டிப்பர் லாரிகளில் எம் - சாண்ட் என, அழைக்கப்படும் பாறை துகள் மண்ணை எடுத்து செல்லும் போது, டிப்பர் லாரி மீது தார்ப்பாய் மூடுவதில்லை. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் பிற வாகன ஓட்டிகளின் கண்களில் துாசு விழுந்து, பாதிப்பு ஏற்படுவதோடு, வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளூர் - சோகண்டி சாலையில் செல்லும் டிப்பர் லாரிகள் மீது தார்ப்பாய் மூடி செல்ல வேண்டும் என, பிற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ