உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழை கால மின் விபத்தை தவிர்க்க வழிமுறைகள்

மழை கால மின் விபத்தை தவிர்க்க வழிமுறைகள்

ஸ்ரீபெரும்புதுார்: பருவ மழை மற்றும் புயல், வெள்ள காலங்களில் மின் விபத்தை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை ஸ்ரீபெரும்புதுார் கோட்ட மின் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதுார் கோட்ட மின் ஆய்வாளர் வெளியிட்ட அறிவிப்பு: மின் இணைப்பு தொடர்பான வேலைகளை அரசு உரிமை பெற்ற நபர்கள் மற்றும் மின் ஒப்பந்தக்காரர் மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்; உடைந்த சுவிட்ச் மற்றும் பிளக்குகளையும் உடனே மாற்ற வேண்டும். பழுதான மின் சாதனங்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். கேபிள் 'டிவி' ஒயர்களை மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்ல கூடாது. மின்கம்பத்திற்காக போடப்பட்டுள்ள கம்பியின் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காயவைப்பதை தவிர்க்க வேண்டும். குளியலறை மற்றும் கழிப்பறைகளில் ஈரமான இடங்களில் மின் சுவிட்ச் பொருத்தக் கூடாது. மின் கம்பத்திலோ அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக் கூடாது. மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வுப் பெட்டிகள், ஒயர்கள் ஆகியவற்ற ி ன் அருகே செல்லக் கூடாது. மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லக்கூடாது. மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டடங்களை போதுமான இடைவெளி விட்டு கட்டவேண்டும். மின் மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்கக் கூடாது. மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின் வாரிய அலுவலர்களிடம் தெரிவிக்கவும். அவசர நேரங்களில் மின் இணைப்பை துண்டிக்கும் வைகயில், மின் கருவிகளின் சுவிட்ச் அமைக்க வேண்டும். மின் சாதனங்கள் உபயோகத்தில் இல்லாத பட்சத்தில், சுவிட்சை ஆப் செய்து வைக்க வேண்டும். இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் நிற்காதீர். கான்கிரீட் தளம் மற்றும் உலோகத்தினால் ஆன கூரையின் கீழ் செல்ல வேண்டும். இடி, மின்னலின் போது, 'டிவி' மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி