உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிருஷ்ணர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கிருஷ்ணர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்தில், ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, திருக்கல்யாண உற்சவ வைபவம் நடந்தது. இந்த நிகழ்ச்சியையொட்டி, 8:00 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் திருக்கல்யாண உற்சவ வைபவ நிகழ்ச்சி நடந்தது.பள்ளூர் கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில், சிவாச்சாரியார் குழுவினர் ராதா, ருக்மணிக்கு, கிருஷ்ணர் சார்பாக மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.அதை தொடர்ந்து, இரவு 11:00 மணி அளவில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ