மேலும் செய்திகள்
மீன் பிடிக்க சென்றவர் குளத்தில் மூழ்கி பலி
19-Sep-2024
காஞ்சிபுரம்:செங்கல்பட்டு பணிமனையில் இருந்து, உத்திரமேரூருக்கு தடம் எண் டி60பி அரசு பேருந்து இயங்குகிறது. இந்த பேருந்து, செங்கல்பட்டில் இருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு, உத்திரமேரூருக்கு காலை 8:00 மணிக்கு வந்தடையும். மீண்டும் காலை 8:10 மணிக்கு உத்திரமேரூரில் இருந்து புறப்பட்டு, 9:15 மணிக்கு செங்கல்பட்டுக்கு செல்லும்.இந்த பேருந்தை பயன்படுத்தி, புக்கத்துறை, நடராஜபுரம், கருணாகரச்சேரி, மங்கலம், ஒழையூர், நெல்வாய், ரெட்டமங்கலம், கட்டியம்பாந்தல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ- - மாணவியர், உத்திரமேரூரில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செல்கின்றனர்.அதேபோல, உத்திரமேரூர் சுற்றுவட்டார மாணவர்கள், இந்த பேருந்து மூலம் செங்கல்பட்டு தொழிற்கல்வி நிறுவனங்கள் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்கின்றனர்.சில தினங்களாக, செங்கல்பட்டு பணிமனை மூலம் உத்திரமேரூருக்கு இயக்கப்படும் அரசு பேருந்து திடீரென அறிவிப்பு ஏதுமின்றி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.இதனால், உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.எனவே, நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்க வேண்டும் என, பல தரப்பினர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
19-Sep-2024