மேலும் செய்திகள்
ஈரோட்டில் சிக்னலில் பசுமை பந்தல் அமைப்பு
29-Apr-2025
காஞ்சிபுரம்:அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் துவங்கியதில் இருந்தே, காஞ்சிபுரத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலில் நடமாடுவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இந்நிலையில், காஞ்சிபுரத்தில் எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள், பட்டு நெசவு தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள், மொபைல் போன் ஷோரூம்கள் அதிகம் நிறைந்த பகுதியான சங்கூசாபேட்டை தெருவில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.இப்பகுதியில் வணிகர்கள், ஒன்றிணைந்து அத்தெருவில், நிழல்தரும் வகையில், இரு இடங்களில் பசுமை பந்தல் அமைத்துள்ளனர்.இதனால், காந்தி சாலையில் இருந்து, பேருந்து நிலையம், ராஜாஜி மார்க்கெட், பழைய ரயில் நிலையம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிக்கு சங்கூசாபேட்டை வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், பசுமை பந்தல் நிழலில், சில நிமிடங்கள் நின்று செல்கின்றனர்.இதேபோல, பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியிலும், தன்னார்வ அமைப்பினர், வணிகர் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
29-Apr-2025