உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கடைகளை மறைக்கும் அ.தி.மு.க., பொதுக்கூட்ட பேனர்கள் தீபாவளி வியாபாரம் பாதிப்பதாக வியாபாரிகள் கவலை

கடைகளை மறைக்கும் அ.தி.மு.க., பொதுக்கூட்ட பேனர்கள் தீபாவளி வியாபாரம் பாதிப்பதாக வியாபாரிகள் கவலை

காஞ்சிபுரம், :அ.தி.மு.க.,வின் 53ம் ஆண்டு துவக்க நாள் விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இம்மாதம் 17ல் நடத்த திட்டமிடப்பட்டிருந்து. இக்கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பங்கேற்க இருந்தார்.ஆனால், கனமழை காரணமாக அன்றைக்கு பொதுக்கூட்டம் நடத்தப்படவில்லை. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.பொதுச் செயலர் பழனிசாமி பங்கேற்க இருப்பதால், அக்கட்சியினர் காஞ்சிபுரம் தேரடி சுற்றி ஏராளமான கட்சி விளம்பர பேனர்களை வைத்து வருகின்றனர்.காந்திரோடு முழுதும், துணிக்கடை, பட்டு சேலை கடைகள், பழக்கடை என அனைத்து வகையான கடைகள் முன்பாகவும் பெரிய அளவிலான கட்சி பேனர்கள், கடையை மறைத்து வைத்துள்ளனர்.தீபாவளி பண்டிகை சமயத்தில், கடையை மறைத்து கட்சி பேனர்கள் வைக்கப்படுவதால், வியாபாரம் பாதிப்பதாக கடை வியாபாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.சனிக்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு, வியாழக்கிழமை முதல் பேனர் வைத்து வருகின்றனர். இதனால், மூன்று நாட்களாக கடைகளை பேனர் மறைத்திருப்பதால் வியாபாரம் குறைவதாக கவலை தெரிவிக்கின்றனர்.தீபாவளி பண்டிகை இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், காந்திரோட்டில் இக்கூட்டம் நடத்தப்படுவதை தவிர்த்து, மண்டித்தெரு, ஏகாம்பரநாதர் கோவில் தேரடி, பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி மைதானம் போன்ற இடங்களில் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை