பூக்கடை சத்திரத்தில் போக்குவரத்து நெரிசல்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் உள்ள பூக்கடை சத்திரத்திற்கு பூ வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்துவதால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.தடையை மீறி நிறுத்தப்படும் வாகனங்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் அப்புறப்படுத்தி வந்தனர். இதனால், பூக்கடை சத்திரம் பகுதியில் நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.இந்நிலையில், பூக்கடை சத்திரம் பகுதியில் போலீசாரின் தொடர் கண்காணிப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பூக்கடை சத்திரம் பகுதியில் நெரிசலை தவிர்க்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.