விவசாயிகளுக்கு பயிற்சி
காஞ்சிபுரம்:இயற்கை விவசாயம் குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு, வேளாண் துறையினர் பயிற்சி அளித்தனர்.காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை வேளாண் இணை இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த இயற்கை விவசாயம் குறித்த பயிற்சிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.வேளாண் துணை இயக்குனர் கிருஷ்ணவேணி இயற்கை வேளாண் சாகுபடி குறித்து, விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் காவியாசெல்வி, விவசாயத்தில் தண்ணீர் சேமிப்பு விபரங்களை எடுத்துரைத்தார்.காஞ்சிபுரம் வனசரகர் ராமு வேளாண் காடு வளர்ப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.