உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இரண்டு பேருக்கு இடமாறுதல்
காஞ்சிபுரம்:இரண்டு உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கு, அத்துறை நிர்வாகம் மாவட்ட இடமாறுதல் அளித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலராக பணிபுரிந்து வந்த பாலகிருஷ்ணன், ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் வட்டாரத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக, ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலராக பணிபுரிந்து வந்த தமிழரசு, உத்திரமேரூர் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.