உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

காஞ்சிபுரம்:இந்திய மருத்துவ சங்கம், காஞ்சிபுரம் கிளை, இறைத்துளிகள் இயக்கம், பசுமை இந்தியா தன்னார்வை அமைப்பு சார்பில், பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த இவ்விழாவிற்கு, இந்திய மருத்துவ சங்கம், காஞ்சிபுரம் கிளை தலைவர் மருத்துவர் ரவி தலைமை வகித்தார். சங்க செயலர் மருத்துவர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் மருத்துவர் ஞானவேல் வரவேற்றார். இதில், முன்னாள் சங்க தலைவர்கள் மருத்துவர்கள் மனோகரன், பூபதி, சரவணன், துணைத் தலைவர் நிஷாப்ரியா, நஸ்ரின் பானு, பார்த்தசாரதி மற்றும் தன்னார்வலர்கள், பாதாம், நாவல், வேம்பு, பூவசரன் உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டனர். ஆடு, மாடுகள் செடிகளை மேயாமல் இருக்க, கம்பி வலை அமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை