உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

உத்திரமேரூர்:உத்திரமேரூர் - செங்கல்பட்டு சாலையில், உத்திரமேரூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், போலீசாரை பார்த்தவுடன் வேகமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். அதில் 1 கிலோ கஞ்சாவை பையில் மறைத்து, வந்தவாசிக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிந்தது.தொடர்ந்து சென்னை அமைந்தகரையை சேர்ந்த இளங்கோ, 43, விக்னேஷ், 38, இருவரையும் கைது செய்து கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை