மேலும் செய்திகள்
குட்கா விற்ற 3 பேர் கைது
05-Dec-2024
ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள கடைகளில், ஒரகடம்போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 'டினெகோ' தொழிற்சாலை அருகே உள்ள பெட்டிக் கடையில், ஹான்ஸ், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது.இதையடுத்து, 2,000 ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளரான, ஆந்திராவை சேர்ந்த மாஜ்ஜி அப்பாயம்மா, 55, கைது செய்யப்பட்டார். 3.8 கிலோ குட்கா பறிமுதல்
சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பேரணக்காவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை, 63. இவருக்கு சொந்தமான பெட்டிக் கடையில், 3.8 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தார்.இதை அறிந்த சாலவாக்கம் போலீசார், நேற்று காலை குட்காவை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரான துரையை கைது செய்தனர்.
05-Dec-2024