மேலும் செய்திகள்
மளிகை கடையில் குட்கா விற்ற இருவர் கைது
06-May-2025
உத்திரமேரூர், உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக, உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, வீரபெருமாள் கோவில் தெருவில் உள்ள, பெட்டிக்கடை ஒன்றில், போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட, 9.8 கிலோ குட்கா பொருட்கள், விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தொடர்ந்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து, ராம்கோபால் தியோரா, 25; துளசிராம், 29; ஆகிய இருவரை கைது செய்தனர்.
06-May-2025