மேலும் செய்திகள்
புகையிலை பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது
18-Mar-2025
காஞ்சிபுரம்:பெங்களூருவில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு, ஆம்னி பேருந்தில், குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, பொன்னியம்மன்பட்டறை செக்போஸ்ட்டில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆம்னி பேருந்து ஒன்றை சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கிலோ கணக்கில் இருந்தது தெரியவந்தது.83 கிலோ புகையிலை பொருட்களையும், ஆம்னி பேருந்தையும் பறிமுதல் செய்த போலீசார், பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த காஞ்சிபுரம், குருவிமலை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 30. என்பவரை கைது செய்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித்யாதவ், 32, என்பவருக்கு, எடுத்து செல்ல, பேருந்தில் கடத்தி வந்தது தெரியவந்தது. அதையடுத்து, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித்யாதவை போலீசார் கைது செய்தனர்.
18-Mar-2025